47 வகையான மருந்துப் பொருட்களுக்கு விலை குறைப்பு!

47 வகையான மருந்துகளுக்கான விலை குறைப்பு தொடர்பாக இவ்வாரத்துக்குள் வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி பாரிய அளவில் மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் விலை மற்றும் சிறிய அளவில் மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் விலை போன்றவற்றை கருத்தில் கொண்டு தேசிய ஓளடத கட்டுப்பாட்டுச் சபை இந்த விலை நிர்ணயத்தை மேற்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் முதற்கட்டமாக நீரழிவு, இரத்தச் சோகை உள்ளிட்ட சில நோய்களுக்கான மருந்துகள் உட்பட 47 வகையான மருந்துகளுக்கான விலை குறைக்கப்படவுள்ளது. இதேவேளை விலை குறைப்பு காரணமாக ஏதேனும் நிறுவனங்கள் மருந்துகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்த முற்படின் அதற்கு முகம்கொடுக்கவும் தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|