42 படகுகளை விடுவிக்க தீர்மானம்

Monday, June 5th, 2017

இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 42 படகுகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் படகுகள் தொடர்ந்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கைக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 143 படகுகள் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்து கவனம் செலுத்துவதாக அரசாங்கம் கூறியிருந்தது.

இந்த அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டாலும் இந்திய சமுத்திர கடற்பரப்பில் தமக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: