42 ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் – 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு!
Tuesday, September 13th, 201642 ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ். மாவட்டத்தில் எதிர்வரும்- 29 ஆம் திகதி முதல் அடுத்த மாதம்-02 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
குறித்த விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றுவதற்காக ஏனைய மாகாணங்களிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள், பெற்றோர்கள் அலுவலர்கள் ஆகியோர் வருகை தரவுள்ளனர். இவ்வாறு வருகை தரவுள்ளோரைச் சிறந்த முறையில் கவனிப்பதற்கேற்ற உரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீர, வீராங்கனைகள் யாழ். நகரை அண்டிய பாடசாலைகளான யாழ். மத்திய கல்லூரி, யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி, யாழ். புனித பரியோவான் கல்லூரி, யாழ். சுண்டிக் குளி மகளிர் கல்லூரி, யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ். திருக் குடும்பக் கன்னியர்மடம் கல்லூரி, யாழ். கனகரத்தினம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும்,
கிளிநொச்சியிலுள்ள சில பாடசாலைகளிலும் தங்க வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கலந்து கொள்ளும் வீர, வீராங்கனைகள் உட்பட ஏனையோருக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் குளிப்பதற்கான வசதிகள், மலசல கூட வசதிகள் உள்ளிட்ட ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
Related posts:
|
|