40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாளை இலங்கை வந்தடையும் – எரிசக்தி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல், நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டை அண்மிக்கும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R. ஒல்கா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடன் ஒப்பந்தத்திற்கு அமைய குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கப்பலில் அடங்கியுள்ள டீசலை எதிர்வரும் திங்கட்கிழமை தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அநாவசியமான முறையில் தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்ததால், அதனை முகாமைத்துவம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R.ஒல்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ் பல்கலை மாணவர் மோதல்: ஜனாதிபதி கவலை!
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு மேலதிகமாகவும் நாளை யாழ். குடாநாட்டில் மின்தடை!
மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் - வர்த்தகர்களுக்கு பிரதமர் மஹிந்த ...
|
|