4,000 மெட்ரிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை – மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, June 24th, 2022

40,000 மெற்றிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்றையதினம் நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பல் நேற்றையதினம் நாட்டை வந்தடையவிருந்த போதும், ஒருநாள் தாமதமாகியே பிரவேசிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதேநேரம், இன்றையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே பெற்றோல் விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் கையிருப்பு குறைவடைந்துள்ள பின்னணியில் அதற்காக மக்கள் வாகனங்களுடன் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் பல நாட்கள் வரிசைகளில் காத்திருக்கின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: