40 புதிய பேருந்துகள் சேவையில் – நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிப்பு!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 40 பேருந்துகளை தேசிய போக்குவரத்து சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தில் 165 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. குறித்த பேருந்துளில் 40 பேருந்துகள் இவ்வாறு பொது போக்குவரத்து சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், கிராபுரங்களில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த வருடத்திற்குள் 500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈ.பி.டி.பியின் முயற்சியால் கிளிநொச்சி மாவட்ட இ.போ.ச.சாலை, பேருந்து தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வ...
மீண்டும் அச்சுறுத்தலை நோக்கி நகரும் இலங்கை – எச்சரிக்கை செய்துள்ளார் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அச...
இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க இந்தியாவும் சீனாவும் ஒத்துழைக்க வேண்டும் - ஜப்பான் நிதி அமை...
|
|