40 ஆயிரத்து 800 தொன் நெல் கொள்வனவு செய்யத் திட்டம் – நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளிநொச்சிக் காரியாலயம் தெரிவிப்பு!

நெல் சந்தைப்படுத்தல் சபையால் 40 ஆயிரத்து 800 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக சபையின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.
நெல் அறுவடை தற்போது வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சபையில் அரச நிர்ணய விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. ஒரு கிலோ சம்பா 41 ரூபாவுக்கும் ஒரு கிலோ நாடு 38 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.
ஒரு விவசாயிடம் இருந்து 2 ஆயிரம் கிலோ கிராம் நெல் வரையில் கொள்வனவு செய்யப்படும். இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 32 ஆயிரம் கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
வெளியானது 16 அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலைகள்!
அரசியல் நெருக்கடியை தீர்க்க விரைந்து செயற்பட வேண்டும் - மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை!
சிறுவர்களிடையே கொரோனா பரவல் அதிகரிப்பு - கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ...
|
|