40வீத சம்பள அதிகரிப்பு பொலிஸாருக்கு கிடைக்கும்!

Monday, February 6th, 2017

பொலிஸ் அதிகாரிகளின் மாதாந்த சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி மாதம் முதல் அமுலுக்கு வரும்வகையில் இவர்களது சம்பளத்தை 40 வீதமாக அதிகரிப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் சம்பளத்தை 40 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 17 வீதமான சம்பள அதிகரிப்பானது 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்பட்டு வந்தது.

மிகுதியாக உள்ள 23 வீத சம்பள அதிகரிப்பே இந்த மாதம் முதல் அமுலுக்கு வர உள்ளது. குறித்த அதிகரிப்பிற்கு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ள நிலையில், அதனை பெப்ரவரி மாதம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கான அடிப்படை சம்பளத்தில் 40 வீதமான அதிகரிப்பு, கொடுப்பனவு என்ற வகையில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sl_police_flag-720x480

Related posts: