4, 500 ஆண்டுகள் பழைமையானது தமிழ் – ஜேர்மனிய ஆய்வில் தெரிவிப்பு!

Saturday, March 24th, 2018

திராவிட மொழிக் குடும்பம் சுமார் 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழைமையானது என்று ஜேர்மனியப் பல்கலைக் கழகமொன்று தனது ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்டது.

இது தொடர்பில் அந்தப் பல்கலைக் கழகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திராவிட மொழிக் குடும்பம் மிகவும் தொன்மையானதாக விளங்குகிறது. சுமார் 80 மொழி வகைகளாக 22 கோடி மக்களால் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. திராவிட மொழிக் குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள் வரை பழைமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும் திராவிட பாரம்பரியம் மற்றும் கலாசார மேம்பாடுகளின் ஆரம்ப கால கட்டமும் ஒத்துப்போகிறது.

தமிழ் மொழிகளில் எதிர்கால இருப்பு என்று பார்க்கையில் தமிழ் பாதுகாப்பாக உள்ளது. பண்டைக்காலத்துக்கும் நவீன யுகத்துக்கும் இடையில் இணைப்பு பாலமாக செய்யுள்கள், கவிதைகள், மதசார்பற்ற மற்றும் பக்திசார்ந்த உரைநடைகள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை தமிழ் மொழியில் எழுத்து வடிவில் உள்ளமையே தமிழின் எதிர்கால இருப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளமைக்கு முக்கிய காரணம் என்றுள்ளது.

Related posts: