4 மாதங்களில் பெரும் இலாபத்தை ஈட்டி பெற்றோலிய கூட்டுத்தாபனம் – நிதி நிலை அறிக்கையில் சுட்டிக்காட்டு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 4 ,340 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக நிதி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
மசகு எண்ணெய் இறக்குமதிக்காக 277.1 மில்லியன் டொலர்களும் கனிம வள இறக்குமதிக்காக 43.4 பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சினால் இந்த வருட நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கைக்கு 1,599.7 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது, இது மொத்த இறக்குமதி செலவில் 30 சதவீதமாகும் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை மறுப்பு!
இலங்கை போக்குவரத்து சபையில் 285 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதி - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...
அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் கடுமையான கட்டுப்பாடு - யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ...
|
|