4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை!
Sunday, June 11th, 2023இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மூவாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை, அதன் தலைவர் உதயகுமார அமரசிங்கவிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி மாதம்முதல் இதுவரையான காலப்பகுதியில் எண்ணாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவற்றில், சிறுவர்களின் செயற்பாடுகள், கல்வி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவற்றில் மூவாயிரம் முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊடகங்களை மேற்பார்வையிட சுயாதீன ஆணைக்குழு - ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க!
நெல் அறுவடையை கொள்வனவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
வன்முறைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி பணிப்புரை வி...
|
|