39 நாடுகளுக்கு இலங்கையில் On Arrival Visa!
Wednesday, July 10th, 2019எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் 39 நாடுகளின் பயணிகளுக்கு வருகை தரும் விசாவை (On Arrival Visa) இலங்கை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரவிருந்த போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக அது பிற்போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, ரஸ்யா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்ரோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிறிஸ், அங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லட்டிவியா, லித்வேனியா, லக்சம்பேக், மோல்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ரொமேனியா, ஸ்லோபேனியா, ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூஸ்லாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கான வருகைத் தரும் விசா (on arrival visa) பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|