37,500 மெட்ரிக் டன் எரிபொருளுடன் கப்பலொன்று இலங்கை வருகை!

Saturday, March 26th, 2022

37, 500 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று நாளைமறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது.

அத்துடன், குறித்த அளவான எரிபொருள் தாங்கிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து, 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் மற்றும் விமான எரிபொருள் என்பவற்றை தரையிறக்கும் பணிகள் நேற்று (25) மாலை ஆரம்பிக்கப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், இன்றையதினம் 3,650 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


உரிய பகுதிக்கே தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் - தகவல் திணைக்கள பணிப்ப...
நாளைமுதல் நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம் - நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்திய...
தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள 4,643 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் - கல்வி அமைச...