367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு!
Wednesday, April 13th, 2022367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல், கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இந்த வர்த்தமானியில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
அப்பிள், திராட்சை, தோடம்பழம், யோகட் உள்ளிட்ட மேலும் பல உணவுகளும், குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி, ஆடைகளை சுத்தம் செய்யும் இயந்திரம் உள்ளிட்ட பல இலத்திரனியல் பொருட்களும் அதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவியுங்கள்!
இறக்குமதியாகும் உருளை கிழங்குக்கு விசேட வரி - அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை!
வாகன விபத்துக்களால் இந்த வருடம் 564 பேர் பலி - காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
|
|