36 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அமைச்சரிடம் பொலிஸ் திணைக்களம்!

Tuesday, April 19th, 2016

இலங்கையில் வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அரசியல்வாதி ஒருவரின் கட்டுப்பாட்டில் பொலிஸ் திணைக்களம் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பதில் அமைச்சராக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இதையடுத்தே காவல்துறை திணைக்களம் அமைச்சர் சுவாமிநாதனின் தற்காலிக கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு இவரிடம் இந்தப் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவியில் இருந்த போது 1980ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சராக கே.டபிள்யூ தேவநாயகத்தை நியமித்திருந்தார்.

அப்போது பொலிஸ் திணைக்களம் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வந்தது. அதற்குப் பின்னர் காவல்துறை திணைக்களத்தை கட்டுப்படுத்தும் அமைச்சு எதுவும் கடந்த 36 ஆண்டுகளில் தமிழர் எவருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

தற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க வெளிநாடு சென்றிருப்பதாலேயேஇ தற்காலிகமாக காவல்துறை திணைக்களம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வசம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இளைஞரை தாக்கிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றம்!
மார்ச் 11ஆம் திகதி கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா !
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
உடல் உறுப்பு தானம் செய்வதை மக்கள் விரும்பவேண்டும் - இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஞானதாசன்
தகவல்களை மறைத்த பட்டதாரிகள்: 104 பேர் வேலை இழப்பு!