350 வாக்காளர் அட்டைகள் மாயம்: தபால் ஊழியருக்கு விளக்கமறியல்!

Wednesday, February 7th, 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட 350 வாக்காளர் அட்டைகளை மறைத்து வைத்தமை தொடர்பில் தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி, பல்லேபெத்த தபால் அலுவலகம் மூலம் பகிர்ந்தளிப்பதற்காக வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் மறைத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சந்தேக நபரை கொடகவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.