35 வயதுக்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த தடை!

35 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் முன்வைத்த யோசனைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானத்திற்கு முன் வந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் முச்சக்கர வண்டிகளினால் ஏற்படுகின்ற விபத்துகளின் அதிகரிப்பு காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உலக நாணய நிதியத்துடன் இணக்கம் கொள்ளும் இலங்கை!
A/L பரீட்சை இன்றுடன் நிறைவு!
தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளுக்கான பதிவு நாளை!
|
|