35 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை!
Thursday, June 28th, 2018கடந்த மூன்று வருடங்களில் 35 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் பேர் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளதாக அத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் 700 தொடக்கம் 800 வரையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுவதாகவும் அவற்றை நிபுணர் குழுவொன்று அவதானமாகப் பரிசீலித்த பின்னரே பொருத்தமானவற்றை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த கால ஆட்சியில் இடைநிறுத்தப்பட்ட போதிலும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மீண்டும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
Related posts:
உற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை !
தபால் ஊழியர் வேலை நிறுதத்தால் இலட்சம் பொதிகள் தேக்கம்!
அரசியல் அரங்கில் தமிழ் சக்திகளை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் வலுச்சேர்க்கும...
|
|