35 ஆயிரம் கிலோ பனம் வெல்லத்தை 2018 இல் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

பனை அபிவிருத்திசபை இம்முறை 35 ஆயிரம் கிலோ வரையிலான பனம் வெல்லம் உற்பத்தியை விரைவில் ஆரம்பிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை போன்ற பிரதேசங்களில் உள்ள சபையின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக இந்தப் பனம் வெல்லம் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பனை அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது.
சபையால் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பனம் வெல்லத்திற்கு நல்ல கிராக்கியும் வரவும் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலான தொகையில் இந்தப் பனம் வெல்லம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இந்தப் பனம் வெல்லம் உள்ளூரிலும் மற்றும் வெளிநாடுகளிலும் கூடுதலாக சந்தைப்படுத்தப்பட்டும் வருகின்றன. வெளிநாடுகளுக்கு இம்முறை கூடுதலான பனம் வெல்லத்தை ஏற்றுமதி செய்யப்படும் சபை உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சபையின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக இந்தப் பனம் வெல்லத்தின் விற்பனை கடந்த 2017 அம் ஆண்டில் அதிகரித்தும் காணப்பட்டதாக சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவித்தன. அதிகமான மக்கள் கூடுதலாக பனம் வெல்லத்தை பயன்படுத்தியும் வருகின்றனர்.
Related posts:
|
|