334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!

Tuesday, December 5th, 2017

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 334 பேர் கடந்த 9 மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 229 ஆண்களும், 105 பெண்களும் உள்ளடங்குவர். மேலும் 52 பேர் காணாமலும், 22 பேர் தற்கொலை செய்தும், 9 பேர் தாக்குதல்கள் காரணமாகவும், 247 பேர் சுகயீனமுற்றும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இறப்பினை உறுதிப்படுத்தும் பிரிவின் மூலம் காப்புறுதியினை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts: