31ஆம் திகதி முதல் மட்டக்களப்பு வான்படை தளம் சிவில் வான்படை அதிகார சபையின் கீழ்!

எதிர்வரும் 31 ம் திகதி முதல் மட்டக்களப்பு வான்படை தளம் சிவில் வான்படை அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக தனியார் வர்த்தக வானூர்திகள் அங்கு தரையிறங்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டு வானூர்திகள் மட்டும் மட்டக்களப்பு வானூர்தி நிலையத்தை பயன்படுத்தி வந்தன. இந்த நிலையில், தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் வானூர்திகள் அங்கு தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக சிவில் வானூர்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிமலசிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
மே தினம் பிற்போடப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!
54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!
பொலிஸ் சேவை மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும் - உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெர...
|
|