3000 நேரடி வேலை வாய்ப்புகளுடன் உருவானது தெற்காசியாவின் மிகப்பெரும் டயர் தொழிற்சாலை!

Friday, January 15th, 2021

3000 நேரடி வேலை வாய்ப்புகளையும், அதன் மூன்று மடங்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் வழங்க கூடியதான. தெற்காசியாவின் மிகப்பெரிய ரயர் மற்றும் ரேடியேட்டர் ரயர் உற்பத்தி ஆலையான “ஃபெரெண்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ நிறுவனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஹொரன வகவத்த முதலீட்டுச் சபை கைத்தொழில் வலயத்திற்கு சொந்தமான 155 ஏக்கர் நிலத்தில் இந்த கைத்தொழில் வளாகம் அமைக்கப்பபட்டுள்ளது.

இதற்கான முதல் கட்டத்திற்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் உலகின் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

சுமார் 250 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது, அதே நேரத்தில் இரண்டாம் கட்டம் மார்ச் 2021 இல் தொடங்குவதற்கு தயாராக உள்ளது.

இதன் மூலம் 3000 நேரடி வேலை வாய்ப்புகளையும், மூன்று மடங்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே SUV வாகனங்கள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல உலகத் தரம் வாய்ந்த டயர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறன. 80% உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுவதுடன், மீதமுள்ள 20% உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் முதல் தொகுதி உற்பத்தி இந்த மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கள் உற்பத்தி அதிகரித்தும் விற்பனை பெரும் வீழ்ச்சி - பியரும் தாக்கம் செலுத்துகின்றதென கூறுகிறது பனை த...
அரசாங்க அதிகாரிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை எனது ஆட்சியில் இருக்கக் கூடாது - ஜனாதிபதி!
வாடகை அடிப்படையிலான கட்டடங்களை அமைச்சுகளின் பாவனைகளுக்கு பெற்றுக்கொள்ள - ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித...