300 புகையிரதங்கள் இருந்தாலும் 130 புகையிரதங்களே சேவையில் – புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு!

Saturday, September 5th, 2020

புகையிரத திணைக்களத்தின் இயந்திரங்கள் மற்றும் வேகக் கட்டுப்பாடுடன் 300 புகையிரதங்கள் காணப்பட்டாலும், அவற்றில் 130 புகையிரதங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருவதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சுமார் 150 இயந்திரங்கள் தற்போது பாவனையின்றிக் காணப்படுவதாகவும் புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் –  புகையிரத திணைக்களத்தில் இவ்வாறான வளங்கள் காணப்பட்ட போதிலும் அவைகள் முறையாக செயற்படுத்தப்படாமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியு;ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: