30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெற்றுள்ளனர் – பாடசாலை மாணவர்களுக்கான செலுத்துகையும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்ட 57 வீதமானோர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸையேனும் பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை வெள்ளிக்கிழமைமுதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்
அதற்கமைய, வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில்
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் நாளைமுதல் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷாமன் ரஜீந்திரஜித் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் குறித்த வயதெல்லையை சேர்ந்தவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் தடுப்பு பிரிவு ஆகியன இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்களிடம் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|