30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு ஒருவாரகால அவகாசம் – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, September 21st, 2021

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது.

குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர்  சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசி பெற்றிருந்தாலும், ஒருசிலர் பல்வேறு காரணங்களால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை நிர்வகிக்க முடியாது என்றும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கடந்த வாரம் நிறைவடையவிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அதற்காக மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்டபிடத்தக்கது.

Related posts:


இரட்டைக் குடியுரிமை உள்ள அரச அதிகாரிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் - பெப்ரல் அமைப்பு!
உயர்தர மாணவர்களுக்கான தொண்டமனாறுப் பரீட்சைகள் நாளை ஆரம்பம் – சகல மாணவர்களையும் பரீட்சைக்கு தோற்றுமாற...
குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் - அமைச்சர் ஜோ...