30 துப்பாக்கிகளுக்கு 2017 இல் புதிய அனுமதி!
Thursday, July 26th, 2018
அரசியல்வாதிகளுக்குக் கடந்த வருடம் 30 துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
71 துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை மக்கள் பிரதிநிதிகள் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
இதேவேளை சொத்துக்கள் மற்றும் உயிர்ப்பாதுகாப்புக்காக 78 துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் அரச தனியார் துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மூன்று துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களும் பயிர்ச்செய்கைப் பாதுகாப்புக்காக 117 துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் விளையாட்டுத் தேவைகளுக்காக 9 துப்பாக்கிகளுக்கும் கடந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்குமாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற்று துப்பாக்கி பெற்றுக்கொண்டுள்ளார் என்று சபை உறுப்பினர் அஸ்மின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் அதனைச் சபையில் வெளிப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார். அதனை மறுத்துள்ள அனந்தி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|