30 ஆயிரம் கண்ணிவெடிகள் முகமாலையில் இதுவரை மீட்பு!

Monday, December 5th, 2016

முகமாலைப் பகுதியில் 30ஆயிரத்துற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில்,

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தப் பகுதிகளில் இருந்து சுமார் 30ஆயிரத்திற்;கும் மேற்பட்ட கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்காகத் தற்போது 500 வரையான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டிலிருச்து ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது. இதுவரை 2லட்சத்து 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெடி பொருட்களை அகற்றியுள்ளது – என்றார். மேலும் முகமாலை பகுதியில் டாஸ் நிறுவனமும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

65792544-600x450