3 மாத குழந்தை வரலாற்றுச் சாதனை!

Friday, September 28th, 2018

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் 3 மாத கைக்குழந்தை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் பதவியேற்றார். 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

நியூசிலாந்து தொலைக்காட்சித் தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் என்பவருடன் வாழ்ந்து வந்த ஜெசிந்தா, கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவுக்கு அடுத்த படியாக பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்ற பெண் என்ற பெயரை ஜெசிகா பெற்றார்.

இந்நிலையில், நியூயோர்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ஜெசிகா தனது 3 மாத கைக்குழந்தை அட்ரென் கேபோர்ட் உடன் வந்து கலந்து கொண்டார். பெண் தலைவர் ஒருவர் ஐ.நா. கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதால் ஜெசிந்தா சாதனை படைத்துள்ளார். அவரது குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐநாவின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.


அப்போலோவின் கணினி இரகசியங்கள் களவு- வெளிவருமா ஜெயலலிதாவின் மருத்துவ உண்மைகள்?
மாகாணசபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை!
எகிப்து  தாக்குதலுக்கு  இலங்கை அரசாங்கம் கண்டனம்!
சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி!
புனித ரமழான் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு EPDPNEWS.COM  இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்!