3 ஆயிரத்தை நெருங்கியது சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் – கோதுமை மா, சிமெந்தின் விலைகளும் நள்ளிரவுமுதல் உயர்வு!

Monday, October 11th, 2021

சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை கடந்த நள்ளிரவுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 257 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 2 ஆயிரத்து 750 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை ஆயிரத்து 101  ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 2.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 12.5 கிலோ எடைக்கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 எடைக்கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 2 ஆயிரத்து 840 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே 5 கிலோ எடைக்கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 393 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 கிலோ எரிவாயுவின் புதிய விலை ஆயிரத்து 136 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

கோதுமை மாவின் விலையும் சீமெந்தின் விலையும் இன்று திங்கட்கிழமைமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 50 கிலோ சிமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாயினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதனையடுத்து, 50 கிலோ சீமெந்து மூடையின் தற்போதைய விலை ஆயிரத்து 98 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோதுமை மா கிலோவொன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: