3 ஆம் தவணைப் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பம்!

Friday, October 12th, 2018

வடக்கு மாகாணப் பாடசாலைகளின் 3 ஆம் தவணைப் பரீட்சை அடுத்த மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்று மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் 6 தொடக்கம் 10 ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் பரீட்சையே 14 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

காலை 8 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும். 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விருப்பத் தெரிவுக்குரிய பாடங்களுடன் பரீட்சைகள் நிறைவடையும். தரம் 9 க்கான விஞ்ஞான செயன்முறை பரீட்சைகள் 8 ஆம் திகதியும் தரம் 10 க்கான விஞ்ஞான செயன்முறைப் பரீட்சைகள் 12 ஆம் திகதியும் நடைபெறும். தரம் 9 க்கான அழகியல் பாட செயன்முறைப் பரீட்சைகள் 12 ஆம் திகதியும் தரம் 10 க்கான அழகியல் செயன்முறைப் பரீட்சைகள் 8 ஆம் திகதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: