286 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கம் – எந்தப் பிரச்சினையும் வராது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவிப்பு !

286 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ள அதேவேளை இதனால் எந்தப் பிரச்சினையும் வராது என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் பல பொருட்களுக்கான கட்டுப்பாடுகளையும் படிப்படியாக முடிவுக்கு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம். இதனை அரசாங்கம் மிகவும் கவனமாகச் செய்து வருகின்றது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாயை அதிகரிப்பதற்கு வாகனங்களை இறக்குமதிக்கு அனுமதி கோருகின்றனர். இருப்பினும், இதுபோன்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்.
மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் நாட்டின் தேவைகள் உட்பட ஒவ்வொரு துறையையும் கலந்தாலோசித்து,
கடந்த ஐந்தாண்டுகளின் பதிவேடுகளைப் பார்த்து ஆண்டுக்கு செலவழிக்க வேண்டிய டொலர்களின் அளவையும் மதிப்பீடு செய்தோம்.
அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, 286 பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|