280 அரச சேவையாளர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை!

அரச சேவையாளர்கள் 280 பேருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுவதாக அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நிர்வாக உத்தியோகஸ்தர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட அலுவலக பணியாளர்களும் அடங்குவதாக அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அனேகமாக விசாரணைகள், காலம் கடந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.கல்வித் துறையில் சேவையாற்றுபவர்களிடையே அதிகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அரச சேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
2ஆம் கட்ட பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்!
442 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழங்க நியூ டைமண்ட் கப்பலின் உரிமையாளர் இணக்கம்!
நாளை தீர்மானமிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் - இன்றும் பல சந்திப்புகள் !
|
|