28 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள்: அமைச்சரவை அனுமதி !
Saturday, October 20th, 2018வடக்கு, கிழக்கில் மீள்குடியமர்ந்த குடும்பங்களுக்கு தலா 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா மதிப்பிலான 65 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த வீடுகளை அமைக்கும் பணிக்கான உடன்படிக்கையை இந்திய நிறுவனமான என்.டி.என்டர்பிறைஸ் மற்றும் இலங்கை நிறுவனங்களான யாப்பா டெவலோபர்ஸ், ஆர்சேடியம் பிறைவேற் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களிடம் வழங்க வடக்கு அபிவிருத்தி அமைச்சர் ஐ.எம்.சுவாமிநாதன் முன்வைத்த ஆவணத்துக்கே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தவர்களுக்காக வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 65 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையை தெரிவு செய்யப்பட்ட 3 நிறுவனங்களிடம் வழங்க அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டுக் குழுவால் அனுமதியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|