27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில், பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது – துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!

Saturday, May 22nd, 2021

இன்றுமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை பயணிகள் ரயில்கள் எதுவும் சேவைகளில் ஈடுபடாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சரக்கு மற்றும் எரிபொருட்களை எடுத்துச்செல்லும் ரயில்கள் மாத்திரம் இக்காலப்பகுதயில் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் டப்ளியு.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் இடம்பெறாது.

கடந்த காலத்தில் இடம் பெற்றது போன்று அத்தியாவசிய சேவைகளுக்காக செல்லும் போது மக்களுக்காக மாத்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

ஜனாதிபதியின் நிலையான சூழல் பாதுகாப்பு கொள்கையை நிறைவேற்றுவதே நோக்கம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல!
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு - அரியாலை, பூம்புகாரில் பயணித்த ...
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள...