25000 ரூபா கையூட்டல்: தொழில் திணைக்கள அதிகாரிக்கு 10 வருட சிறை !

Tuesday, March 14th, 2017

25000 ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்ட தொழில் திணைக்கள அதிகாரி ஒருவருக்கு பத்து ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க விதித்துள்ளார்.

பேக்கரி உரிமையாளர் ஒருவரிடம் குறித்த தொழில் திணைக்கள அதிகாரி 25000 ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டார் என நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பேக்கரியில் கடமையாற்றிய பணியாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி செலுத்தாமை தொடர்பில் வழக்குத் தொடர்வதனை தவிர்ப்பதற்கு 25000 ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டுள்ளார்.

கையூட்டல் பெற்றுக் கொண்டமை ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து குறித்த தொழில் திணைக்கள அதிகாரிக்கு பத்தாண்டு சிறைத்தண்டனையும் 40000 ரூபா அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.

அனுராதபுரம் தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய சரத் பிரேமசந்திர என்ற அதிகாரிக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts: