2500 கொரோனா நோயாளிகளை தாண்டினால் பெரும் ஆபத்து – வைத்தியர்கள் எச்சரிக்கை!

Tuesday, April 7th, 2020

கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 2500 வரை அதிகரித்தால் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சிடையும் ஆபத்துக்கள் உள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்தேக இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் ஜுன் மாதம் வரை நீடிக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வீடுகளுக்கு அருகில் சிறிய கொத்துகளாக நோயாளிகள் கிடைக்கும் நிலையானது அடுத்த மட்டத்தில் கிராமங்களுக்கு நோயாளிகள் கொத்துக்களாக கிடைக்கும் வரையான நிலை நெருங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

வைரஸ், கிராமம் வரை பரவுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக நூற்றுக்கு 80 வீதத்தை விடவும் சமூக இடைவெளியே உறுதி செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் 178 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 38 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: