25 ஆம் திகதி முதல் முத்திரை கண்காட்சி!

Monday, May 14th, 2018

தபால் திணைக்களத்தின் முத்திரை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முத்திரை கண்காட்சி எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கண்காட்சி மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் கொழும்பு 10, டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் உள்ள தபால் தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

பழமையான முத்திரைகள், சில்லரை காசு, நாணயத்தாள் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு முத்திரைகளை கொள்வனவு செய்யவும், முத்திரை, அதற்கான அல்பம் மற்றும இன்னும் முத்திரைகள் தொடர்பான பல்வேறு விடயங்களை கொள்வனவு செய்யவும் முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: