24 மணி நேர வேலை நிறுத்தம்!

Wednesday, March 29th, 2017

இன்றைய தினம் 24 மணித்தியால வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் சேவை சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.

இன்று காலை 08 மணி முதல் நாளை காலை 08 மணி வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவர் அஜித் பி திலகரத்ன கூறினார்.

எவ்வாறாயினும் அவசர மற்றும் அத்தியவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்கின்ற கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலை, காசல் பெண்கள் வைத்தியசாலை, டி சொய்சா வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, மஹமோதரை பெண்கள் மற்றும் சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை சிறுவர் வைத்தியசாலை ஆகியன இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: