24 மணிநேரத்தில் 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தது – நாளையும் ஆறரை மணிநேர மின்வெட்டு என அறிவிப்பு!

Thursday, April 7th, 2022

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கைக்கு 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 36,000 மெட்ரிக் டன் பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் டீசல் நேற்றும், இன்றும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் இதுவரையில், 270,000  மெட்ரிக் டன் எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

நிலவும் மின் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்றும் (07) நாளையும் (08) 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, A முதல் F வரையிலான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

G முதல் L வரையிலான வலயங்களுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 4 மணி நேரமும், இரவு 07.30 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அத்துடன், கொழும்பு முன்னுரிமைப் பகுதியில் 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: