23ஆம் திகதி தொடக்கம் வாக்காளர் பட்டியல் காட்சிக்கு!

Wednesday, August 14th, 2019

2019ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

இந்தப் பட்டியல் சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலக அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தமது பெயர்கள் வாக்காளர் பட்டியல்களில் இடம்பெற்றிருக்காவிட்டால், ஓகஸ்ட் 23 ஆம் திகதிக்கு முன்னர் முறைப்பாடு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் தத்தமது பெயர்கள் இடம்பெற்றிருந்தால் மாத்திரமே தேர்தலில் வாக்களிக்க முடியும். எனவே, தமது பெயர் சேர்க்கப்பட்டிருப்பதை சகல வாக்காளர்களும் உறுதி செய்வது அவசியம் என அவர் மேலும் சுடிக்கட்டியிருந்தார்.

Related posts: