22 நாட்களில் 3616 டெங்கு நோயளார்கள் : நாளை முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டப்படுத்த தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை நாளை முதல் பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3616 டெங்கு நோயளார்கள் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ளதுடன் 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
வடக்கு தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனைங்காணப்பட்டுள்ளனர். மேலும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை நாளை முதல் பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் இணைப்பாளர் வைத்தியர் ஹசித பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Related posts:
கட்டுநாயக்க வந்த விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டது - காரணம் என்ன?
இலங்கையை பின்னிலைப் படுத்தியுள்ள அமெரிக்கா!
கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மக்கள் போர் கொடி!
|
|