22 இலட்சத்து 66 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது – சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் தகவல்!

Monday, April 19th, 2021

நாட்டில் இதுவரை 22 இலட்சத்து 66 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரை 11 ஆயிரத்து 332 தசம் 5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், 5000 ரூபா கொடுப்பனவு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் இன்று திங்கட்கிழமைமுதல் அதனை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோராக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், சிறுநீரக நோய் நிலைமைக்கான கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், நூற்றாண்டு பூர்த்திக்கான முதியோர் கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.

Related posts: