22 அரச நிறுவனங்களை கோப் குழு முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

நேற்று கூடிய கோப் குழுவின் கூட்டத்தொடரின் போது 22 அரச நிறுவனங்களை கோப் குழு முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
குறித்த அரச நிறுவனங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த 22 அரச நிறுவனங்கள் தொடர்பிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையின் 455 ஆவது பொலிஸ் நிலையம் வவுனியாவில் திறந்து வைப்பு!
யாழ் நகரில் தேசிய அடையாள அட்டை நடைமுறை இறுக்கமாகக் கடைப்பிடிப்பு – பலர் எச்சரிக்கப்பட்டபின் பொலிஸாரா...
யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு - ஒப்புதல் கொடுத்தது பல்கலைக்க...
|
|