21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் – உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்..
உயர் நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவையாக காணப்படுவதால் அவற்றை நிறைவேற்ற பொதுசன வாக்கெடுப்பு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும் - ஜேர்மனிய தூதுவர்
அர்ஜுன் அலோஸியஸுக்கு ஒரு மாதத்தில் 35 கோடி ரூபா லாப பங்கு!
தேயிலை ஏற்றுமதிக்கு நிலையான வரி!
|
|