21 ஆம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க எதிர்பார்ப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும்வாரம்  ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துளய்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா பணிக்குழு பரிசீலனை செய்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்

முடக்கப்பட்டுள்ள நாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் கட்டங்கட்டமாக திறக்ககூடியதாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் 4 வாரங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருப்பதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதத்தில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டை படிமுறை ரீதியில் திறக்ககூடிய சூழ்நிலை உருவாகும். தடுப்பூசி திட்டத்தை முன்னெடுப்பதுடன், இதர சுகாதார விடயங்களையும் முறையாக பின்பற்ற வேண்டும். என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, நாட்டில் தற்போதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அபாய வலயத்தில் இருந்து மீளவில்லை என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: