206 ஆவதாக இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியால் முழு நாடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது – எச்சரிக்கை விடுக்கிறார் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன!

Tuesday, April 28th, 2020

ஜாஎல சுதுவெவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட போதை பொருளுக்கு அடிமையான கொரோனா நோயாளியினால் முழு நாடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த நோயாளி கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். திருட்டு சம்பவம் ஒன்றிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட இவர் பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் சில நோய் நிலைமையில் காணப்பட்டமையினால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் இறுதியில் அவர் தென்கொரியாவின் 31வது பெண் நோயாளி போன்றாகிவிட்டார். குறித்த தென்கொரிய பெண் தனக்கு கொரோனா நோய் தொற்றியிருந்த நிலையில் 9000 பேர் பங்குபற்றி தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டர். அவர்களில் 3000 பேர் இந்த நோய் தொற்றிற்குள்ளாகியுள்ளார். இந்த நிலைமையும் அவ்வாறு தான் உள்ளது. இந்த நோயாளி கைது செய்யப்பட்ட பின்னர் 12 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

முழு கிராமத்தையே முடக்க நேரிட்டது. இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தங்கள் கடமையை சரியாக செய்துள்ளனர். எனினும் 206வது நோயாளியினால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: