2025 ஆம் ஆண்டிற்கான பாதீடு நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Sunday, June 9th, 2024

அடுத்த ஆண்டிற்கான பாதீட்டுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால ஒதுக்கீட்டுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: