2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பரிஸில்

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பிரான்ஸின் பரிஸ் நகரம்பெற்றுள்ளது. பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக்குழுவின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஹம்பர்க் (ஜேர்மனி), ரோம் (இத்தாலி),
பரிஸ் (பிரான்ஸ்), புடாபெஸ்ட் (ஹங்கேரி) உள்ளிட்ட நகரங்கள் விருப்பம் தெரிவித்தன. ஆனால்,நிதி பிரச்னை காரணமாக பாரிசைத் தவிர மற்ற நகரங்கள் ஒலிம்பிக் நடத்தும் போட்டியிலிருந்து விலகின. இதனால், 2024ஆம் ஆண்டு பரிஸில் ஒலிம்பிக் அரங்கேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, 2028ஆம் ஆண்டில் போட்டியை நடத்த அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெற்றுள்ளது.
Related posts:
யாழ். குடாநாடு ஹர்த்தால் காரணமாக முற்றாக ஸ்தம்பிதம்!
வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு பிணை!
மறுவாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!
|
|