2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல்!
Thursday, February 15th, 20242023 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2,242 முறைப்பாடுகளும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் 472 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 404 முறைப்பாடுகளும், சிறுமிகள் பலாத்காரம் தொடர்பில் 51 முறைப்பாடுகளும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் 06 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக முறைபாடுகளை விட 2023 ஆம் ஆண்டு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|