2022 ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் 55 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வு பெற முடியும் – அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Wednesday, November 24th, 2021

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் 55 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வு பெற முடியும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (24) ஐக்கிய மக்கள் சக்தி  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வரும் திகதி தொடர்பில் அமைச்சர் ஜனக பண்டார தென்னக் கோனிடம் வினவியபோது, ​​ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிப்பதன் காரணமாக டிசம்பர் மாத இறுதியில் ஓய்வு பெறும் மக்களும் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: